கம்பளை பிரதேசத்தில் உள்ள வறுமை கோட்டில் வாழும் பாடசாலை மாணவ மாணவிகளை இனங்கண்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கம்பளை முஸ்லிம் யூத் குழுவினர்களால் 13வது வருடத்தில் பத்தாவது முறையாகவும் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
கம்பளை கல்வி வலயத்திற்க்கு உற்ப்பட்ட 10 பாடசாலையில் தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கம்பளை சாஹிரா கல்லூரி பிரதான மண்டபத்தில் வைத்து பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சுமார் 200மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மத தலைவர்கள் அரச அதிகாரிகள் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .