200 வருடங்கள் நிறைவு ; ஆய்வாளர்களுக்கு விஷேட பயிற்சி பட்டறை

0
744

மலையகத் தமிழர்கள் இலங்கைத்திரு நாட்டிற்கு வந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அதில் அதி முக்கியமான அம்சமாக மலையகத்தின் சமூக பொருளாதார மற்றும் வாழ்வியல் அம்சங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்பவர்கள், ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளது.  இப்பயிற்சிப் பட்டறையின் பின்னர் பங்குபற்றுனர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு தரமான ஆய்வுகள் நூல் வடிவில் தொகுக்கப்படவுள்ளன.

இவ் ஆய்வுப் பயிற்சிப்பட்டறையில் பங்குபற்ற விரும்புபவர்கள் தமது சுயவிபரக் கோவை மற்றும் பயிற்சியில் பங்குபற்றுதலுக்கான விருப்பத்தை தெரிவிக்கும் கடிதத்தையும் Dr.Ramesh, Department of Political Science, Faculy of Arts, University of Peradeniya  எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.  மின்னஞ்சலில் அனுப்புவதாயின் ramnaresh45@yahoo.com அல்லது gkgajan536@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்ப முடியும். மேலதிக தகவல்களுக்கு 0768629870(Dr.Ramesh), 0765257322(Gajan) ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here