பொருளாதார நெருக்கடியால் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 7,000 வெதுப்பகங்களில் 2,000-க்கும் அதிகமான வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அகில சிறிலங்கா வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக அதிகளவான வெதுப்பகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்தார்.
இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் வெதுப்பக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.