2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் ஒரே பார்வையில்,
* எதிர்வரும் 10 வருடங்களில் உயர் திறமை வாய்ந்த சர்வதேச ரீதியில் போட்டித்தன்மை கொண்ட தொழிலாளர் படையை உருவாக்குதல்….
•மேற்கு, வட மேற்கு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களில்
புதிய பொருளாதார வலயங்கள்
•மூன்று புதிய சமுத்திர சுற்றுலா ஊக்குவிப்பு வலயங்கள்
•உயர்தரத்தில் திறமைச் சித்தியடைந்த 75 மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்
பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில்கள்
•திறமையாக சித்தியடைந்த 75 பட்டதாரிகளுக்கு முதுமாணி பட்டத்திற்கான வெளிநாட்டு புலமைப் பரிசில்கள்
•ருஹுனு, பேராதனை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் முதுமாணி வைத்திய பட்டப்படிப்பு வசதிகள்
•செஸ்வரி மூன்று வருட காலத்தில் படிப்படியாக நீக்கம்
•துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 4 வருடங்களில் படிப்படியாக நீக்கப்படும்
•ஆயுதப்படை ஆளணியினருக்கு 18 வருட சேவையின் பின்னர் ஓய்வு பெறுவதற்கான அனுமதி
•ஸ்ரீலங்கன், டெலிகொம், ஹில்டன், வோட்டர்ஸ் ஏஜ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் ஆகியவை மீள்கட்டமைக்கப்படும்.
•கஷ்டப் பிரதேச பாடசாலைகளுக்கு இணையதள வசதி
•நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுவதற்கான பொருளாதார மேம்பாட்டு ஆணைக் குழு
•சர்வதேச சந்தையில் பிரவேசிப்பதற்கான பல வேலைத் திட்டங்கள்
•வெளிநாட்டு வர்த்தக மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு பூரண அதிகாரம் உள்ள மையப்படுத்தப்பட்ட நிறுவனம்
•2024 மார்ச் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரசு கொடுப்பனவுகளும்
• மின்னஞ்சல் முறையின் ஊடாக செயற்படுத்தல்..
•உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல வேலை திட்டங்கள்
•நுண்கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை தாபித்தல்
•சிறுவர் போஷாக்கை அதிகரிப்பதற்காக விசேட வேலைத்திட்டங்கள்
•சூரிய சக்தி மற்றும் மின்சார மோட்டார் கார்களை உள்ளூரில் தயாரிப்பதற்கான வசதிகளை மேம்படுத்தல்..
•மத தலங்களுக்கு அரசு உதவியுடன் சூரிய சக்தி மின்சாரம்
•இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறான புதிய பொருளாதாரம்
•ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டி தன்மையை கொண்ட பொருளாதார முறை