இவ்வருடம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதனடிப்படையில், 966 பேர் ஆசனங்களுக்காக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்கள் உட்பட மொத்தம் 50 குழுக்கள் கொழும்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், இவற்றில் 46 குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகக் குறைந்த அயவில் பொலன்னறுவை மாவட்டத்தில் 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக் குழுக்களை உள்ளடக்கிய 120 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.