பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடியதோடு, பாராளுமன்ற நடவடிக்கைகள் 24 நிமிடங்களே இடம்பெற்றது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் உள்ளடங்கலாக 10 இற்கும் குறைவானோரே சமூகமளித்திருந்தனர்.
இதன்போது இலங்கை பாராளுமன்றம் சார்பாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து சோகத்தை வெளியிடுவதற்காக 2 நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.