24 மணித்தியால பணிபகிஷ்கரிப்பினால் தேங்கியது 15 இலட்சத்துக்கு மேற்பட்ட கடிதங்கள்

0
142

தபால் ஊழியர்களின் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கை நேற்று(13) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்திருந்தாலும் கூட பணிப்கிஷ்கரிப்பால் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருடன் நேற்று(13) கலந்துரையாடிய போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஊழியர்களை சேவையில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான தீர்வை வழங்க அரசாங்கத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திதி வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here