245 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் கைது

0
371

245 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொலைநகல் இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் காகித உருளைகளில் மறைத்து வைத்து சுமார் 05 கிலோ கிராம் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளார் எனவும் கொலம்பியாவில் இருந்து கியூ.ஆர். 662 என்ற விமானத்தில் வந்துள்ளதாகவும் இலங்கை சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here