ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர் .எம். ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 27 அங்குல நீளமானது என்றும் அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,.
தற்போது வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் அரசாங்க அச்சகத்தில் பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் அரசாங்க அலுவலகங்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.