பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் இதுவரை அனுப்பப்பட்ட பொருள்களின் மதிப்புகள் குறித்து தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அரிசி -பால் பவுடர் இலங்கைக்கு கடந்த மே 18-ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து ஒரு கப்பல், தொடா்ந்து, கடந்த ஜூன் 22, ஜூலை 23-ஆம் திகதிகளில் என மொத்தம் 3 கப்பல்களில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால் பவுடா், 102 மெட்ரிக் தொன் உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டன. இதற்காக, ரூ.196.83 கோடி செலவிடப்பட்டது.
இந்தத் தொகையில் ரூ.8.22 கோடி முதல்வா் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்பு மூலமும்,மீதமுள்ள தொகை அரசின் சொந்த நிதியிலிருந்தும் செலவிடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.