இந்த வருடத்தில் 3,40,000 இலங்கையர்களை வெளிநாட்டுத் தொழில்வாய்ப் புக்களுக்காக அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களின் பிரதிநிதிகளுக்கான தெளிவுபடுத்தல் செயலமர்விலே, இது பற்றித் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தெரிவித்த பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க: இந்த ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மூலம் ஏழு பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வெளிநாட்டு அந்நிய செலாவணியாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
2024 ஆம் ஆண்டு மூன்று இலட்சத்து 14,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றிருந்தனர். அதற்கிணங்க அந்த வருடத்தில் 6. 51 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நாட்டுக்கு அன்னியச் செலாவணியாகக் கிடைத்தது.