350 சிறைக்கைதிகளுக்கு தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று (12) விசேட பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 350 பேருக்கு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் விசேட பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது.