36 வருட கல்விச் சேவையிலிருந்து ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஓய்வு

0
130
சம்மாந்துறை வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் .எம்.மன்சூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில் பிரிவுபசாரநிகழ்வு   (16) வியாழக்கிழமை இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது
சம்மாந்துறை வலய நிருவாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்வை.யாசீர் அரபாத் முன்னிலையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி  நிலோபரா, எச்.நைரூஸ்கான், பி.பரமதயாளன் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 ஓய்வுபெறும் ஆசிரியஆலோசகர்  மன்சூர் தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ,வலய கணினி நிலையப் பொறுப்பதிகாரி ஜலீல்,உதவிக்கல்விப்பணிப்பாளர் எம் எம் எம். ஜௌபர்  ஆகியோர் உரையாற்றினர்.ஆசிரிய ஆலோசகர் றிஸ்வி கவிதையாற்றி வாசித்தார்.
மன்சூரின் அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி பணிப்பாளர் அரபாத் பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார்.
11 வருட காலம் ஆசிரியர் பணியும் 25 வருட காலம் ஆசிரியர் ஆலோசகர் பணியையும் நிறைவு செய்து 2024.05.17ம் திகதி ஓய்வு பெறும்  Z.M. மன்சூர் நல்லதொரு கவிஞராவார்.
ஆசிரிய ஆலோசகர் மன்சூர் ஏற்புரைநிகழ்த்துகையில் தான் 36வருடங்களுக்குமேல் கல்விச்சேவையாற்றியதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருடனும் முரண்படவில்லை.மாறாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கியதாக நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here