இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் தூதரக பணிப்பாளர், கெப்ரியல் கிராவு, அவர்களுக்கும் நீர் வழங்கள் மற்றுப் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பொன்று (10.06.2023) கொல்லுப்பிட்டியில் உள்ள அமைச்சியில் இடம்பெற்றது.
இலங்கையில் வாழ்கின்ற ஓரங்கட்டப்பட்ட சமூகமான பெருந்தோட்டத் துறையினர் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களுடைய கல்வி, பொருளாதார வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் ஏனைய சமுகங்களுடன் உள்ளடக்கி ஐக்கிய அமெரிக்கா சர்வதேச அபிவிருத்தியின் ஒத்துழைப்பை மேலும் எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது பற்றி இருவருக்குமிடையில் கருத்துப்பறிமாற்றங்கள் இடம்பெற்றது..
இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இயங்கும் தேயிலை வகைககளை எவ்வாறு பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் பாதையோரங்களில் வாழும் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என்பது தொடர்பாக உடன்பட்டு திட்டமொன்றை உருவாக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்..
சமூகங்களின் ஓரங்கட்டலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் கல்வி வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வலுப்படுத்தல் என்பன மிக முக்கியமாகும்.
அந்தப் பணியைச் செய்வதில் நான் உறுதியாக இருக்கின்றே என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.