எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

0
285

எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை லோக்கோ பைலட் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 9.00 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. இதில் 3இல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது.

விபத்து நடந்ததை மட்டும் மேற்கு எல்லை ரயில்வே மேலாளர் உறுதிப்படுத்திய நிலையில் தற்போது இந்த விபத்தில் ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உட் பட 5 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here