நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது சேதமாக்கப்பட்ட பூஞ்செடிகள் யார் பொறுப்பு?

0
245

சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின்  இயலும் ஸ்ரீ லங்கா பிரச்சாரக் கூட்டம்  கடந்த 15 ஆம் திகதி நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது நுவரலியா மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த பூந்தோட்டம் மற்றும் மரங்களை நாசம் செய்ததைக்கு மாநகர சபை பூந்தோட்ட பராமரிப்பாளர்கள் மற்றும் மாநகர சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கை சம்பந்தமாக நுவரெலியா மாநகர சபையின் பூந்தோட்ட பராமரிப்பாளர்கள் தெரிவிக்கும் போது ,

நாங்கள் எமது மாத சம்பளத்தை கையில் எடுப்பதை விட இப் பூந்தோட்டத்தை பராமரித்து நுவரெலியாவிற்கு அழகு சேர்ப்பதை எண்ணி பெரும்மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த பூந்தோட்டமானது நுவரெலியா நகர மத்தியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாங்கள் பராமரித்து வந்தோம்.

இருப்பினும் இவ்வாறான நடவடிக்கையால் மனதளவிலும் சரி நுவரெலியாவிற்கு அழகு சீர்குழைந்து போயுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளரிடம் வினவியபோது இப் பூந்தோட்டம் மற்றும் மரங்களை நாசம் செய்தமை உண்மையான ஒரு விடயமாகும். அதனை நானும் நேரில் சென்று பார்வையிட்டேன்.

இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் முன்வந்துள்ளோம். இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவிடமிருந்து இதற்கான நஷ்ட ஈட்டை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here