‘யானை’ இல் களமிறங்கும் இ.தொ. கா.

0
296

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

மேலும் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் கடந்த செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்று, 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கௌரவ அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருந்தார்.

இதன் பின்னர் ஜனாதிபதி தனது அரசியல் அமைப்பின் அதிகாரத்திற்கு அமைவாக கடந்த மாதம் 24ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கான தீர்மானம் எடுத்திருந்தார்.

அதற்கு அமைவாக தேர்தல் ஆனைக்குழுவினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதிற்குல் நடாத்துவதற்கான அரசாங்க வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மலையகத்தின் மாபெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த கூட்டனியில் மற்றும் எந்த சின்னத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என பரவலாலும் பல்வேறு தரப்பினரால் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் (08) அதற்கான இருதி முடிவை அறிவித்துள்ளது இ.தொ.கா உயர்பீடம்.

இதில் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here