பெருந்தோட்டக் குடியிருப்புகளுக்கு இனி கிராமங்கள் இல்லையாம்

0
312

பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதியின்கீழ் ஆறு மாடிகளுக்கும் குறைந்த, மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார் என்று நியூஸ்பெஸ்ட் (சக்தி தொலைக்காட்சி) இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளுக்கான தேவை காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, ஏழு பேர்ச்சஸ் காணி ஒதுக்கி தனிவீட்டுத் திட்டம் அமைக்கப்படுமாயின் அதற்க பெருந்தோட்டப்பகுதிகளில் பெருமளவு நிலப்பரப்பை ஒதுக்க வேண்டிவரும், இது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார் எனவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here