தனிவீடு அவசியம் ; மாடி வீடு திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம்

0
83
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படும். இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் ன்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியுடன் தனிவீடு அவசியம். மாடி வீடு திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம் எஎனவும் தெரிவித்தார்
  (11) முற்பகல் 12.00 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இ.தொ.காவின் தேசிய சபை கூடியது.
“கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா ஐந்து சபைகளைக் கைப்பற்றியது. எனவே, இம்முறையும் உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வியூகம் வகுக்கப்படுகின்றது.
காங்கிரஸின் தனித்துவமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கப்படுகின்றது. கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் பேச்சு நடத்தப்படவில்லை. அது பற்றியும் பரிசீலிக்கப்படுகின்றது.
இ.தொ.காவின் மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவில் இடம்பெறவேண்டும் என்ற தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்டது. இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். நியமிக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை தேசிய சபைக்கு முன்வைக்கும். அதற்கமைய மறுசீரமைப்பு நடவடிக்கைககள் இடம்பெறும்.
காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுப்பது வரவேற்கதக்க விடயமாகும். இப்படியான அரசின் நல்ல திட்டங்களுக்கு இ.தொ.கா ஒத்துழைப்பு வழங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here