வாகனங்களில் உள்ள அநாவசிய அலங்காரங்களை நீக்குவதற்கு சாரதிகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிகமாக வாகன ஒலிகள், அதிக சத்த ஒலி எழுப்புவை, அதிக சத்திலான சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல்,மேலதிக பாகங்களை சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர்.