பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

0
154

கனேமுல்ல சஞ்சீவ எனும் சஞ்சீவ குமார சமரரத்ன என்பவம் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேகநபரை அடையாளம் காண மேலும் பல புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபருக்கு உதவி, ஒத்தாசை வழங்கியதாக தெரிவிக்கப்பம் நீர்கொழும்பு, ஜயமாவத்த, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிம்புர தேவகே இஷாரா செவ்வந்தி எனும் குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு, பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வெகுமதி வழங்கப்படும் என, பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அவர் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் ஏதேனும் தெரிந்தால்,
 கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளர் – 0718591727
 கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி – 0718591735

ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோண் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here