நாட்டின் மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீதத்தினரின் சீருடை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 500 கோடி ரூபாய் பெறுமதியான சீருடைகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையின் முதலாவது தொகுதியாக 3 மில்லியன் மீற்றர் சீருடை துணிகள் 38 ஆயிரம் பெட்டி களில் பொதியிடப்பட்டு , 20 கொல் கலன்களில் இலங்கைக்கு வருகின்றன என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரி வித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளில் 70 சதவீதமான வெட்டிய துணிகளை வழங்க சீன அர சாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மிகுதி 30 சதவீத துணிகளை பெற் றுக்கொள்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.