இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் தொழிலுக்காக 2,37,649 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. கடந்த வருடம் முழுவதும் சுமார் 1,22,000 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாக பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை இந்த வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, கடந்த 9 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிததுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக வைத்தியர்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்தார்.
வெளியேறிய 500 வைத்தியர்களில் 60 பேர் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்காமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.