5500 ஊழியர்கள் நீக்கம்

0
191

ட்விட்டரின் ஊழியர்களில்மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எலான் மஸ்க் அதிரடியாக நீக்க உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை எலான் மஸ்க் ரூ.3.50 இலட்சம் (இந்திய ரூபா) கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.

இந்நிலையில், முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர்,  அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக 3,788 பேர் தமது பணியை இழந்தனர்.

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here