60 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு…

0
267

கலாபூஷணம் அரச விருது விழா – 2024 புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தலைமையில், கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 39வது கலாபூஷணம் அரச விருது – 2024 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

கலாபூஷணம் விருதுக்காக கலாசாரப் பொறுப்பான அலுவலரிடம் 2023.12.31 ஆம் திகதிக்கு 60 வயது நிறைவடைந்த, இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத மூத்த கலைஞர்கள் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

கலாபூஷணம் அரச விருதுக்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்கள் மூத்த கலைஞர்கள் என்பதை நிரூபிக்க அவர்கள் வசம் உள்ள சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் 2024.08.02 ஆம் திகதி பி.ப. 4.00 க்கு முன்னர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

குறித்த விண்ணப்பப்படிவங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்களில் உள்ள கலாசாரப் பிரிவுகளில் இருந்தும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முகநூல் பக்கம் Department of Cultural Affairs என்ற www.culturaldept.gov.lk என்ற இணையத்தள முகவரியில் ஆகியவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு 0112-882592/ 0112872031 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here