மெக்சிகோவிலிருந்து மாத்தறை பிரதேசத்திற்கு கடத்தி வரப்பட்ட 650 கிராம் ஐஸ் போதைப்பொருள், சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாத்தறையில் உள்ள நபருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இப்பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 650 கிராம் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பொதியை எடுத்துச் செல்ல வந்த சந்தேகநபரை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த போதை பொருளின் பெறுமதி சுமார் 13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும், இது சமீபத்திய வரலாற்றில் மெக்சிகோவிலிருந்து கைப்பற்றப்பட்ட முதல் மெத்தம்பேட்டமைன் தொகையென தெரிவிக்கப்படுகிறது.