இலங்கை இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலைகளில் உள்ளவர்களுக்கும் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியினால் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 05 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாகவும், 23 கேணல்கள் பிரிகேடியர் தரமாகவும், 28 லெப்டினன் கேணல்கள் கேர்ணலாகவும், 35 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.