திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்பெருந் தலைவருமான R. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (07) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது.
சம்பந்தனின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (02) காலை முதல் புதன்கிழமை (03) மதியம் வரை, பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நேற்று 2.30 மணியிலிருந்து மாலை 04 மணி வரை பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அன்னாரது பூதவுடலுக்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.