சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு இன்று மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணையகத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இடம்பெற்றுக் கொண்டு செல்லுகின்ற வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்பக்களும்,ஊடகவியலாளாகள்; மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குள்ளாக்கப்படு
அதுமட்டுமன்றி சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்ற நிலைமைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டு போகின்றது.
சிவில் அமைப்புக்களுக்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ இடம்பெறக் கூடாது என வலியுறுத்தி புதன் கிழமை காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு நடவடிக்கையும், மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.
அதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பிலும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.