பண்டிகைக் காலத்தில் மாத்திரம், மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 251 பேர் உட்பட போக்குவரத்து விதிகளை மீறிய 8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலப்பகுதியில் வாகன விபத்துகளை குறைப்பதற்கான விசேட போக்குவரத்து திட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த விசேட நடவடிக்கைகயின் கீழ், வாகனங்களை கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செலுத்துவோர் அல்லது போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறித்து 119 அல்லது 1997 என்ற தொலைபேசி எண்கள் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.