89 Killers அணியினர் வெற்றி

0
64

வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “பழைய மாணவர் சம்பியன்ஸ் 2024” கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களான 2005 O/L, 2008 A/L (89 Killers) அணியினர் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று பாடசாலைகளின் “பழைய மாணவர் சம்பியன்ஸ் 2024” கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி கொண்டயன்கேணி ஆர்கலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டியில் இறுதி போட்டியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை “89 killers” அணியினரும் பேத்தாழை விபுலானந்தா தேசிய பாடசாலை “2017 Vipulanandians” பழைய மாணவர் அணியினரும் பங்குபற்றினர்.

இதில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை “89 killers” அணியினர் வெற்றிகொண்டு சாம்பியன்ஸ் பட்டத்தை தனதாக்கி தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றிவாகை சூடியுள்ள வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை “89 killers” அணியினருக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் பாடசாலை சமூகம் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வாழைச்சேனை இந்துக்கல்லூரியினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here