உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.
92 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று இரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1991-96 இல் நிதியமைச்சராக திறமையாக செயல்பட்ட மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.