தலிபான்களின் உத்தரவுக்கு அமைய ஆப்கான் தொலைக்காட்சி சேவைகளில் உள்ள பெண் தொகுப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமது முகத்தை மறைத்தபடி தோன்றினர்.
இதற்கு முந்தைய தினத்தில் இந்த அரசாணையை மீறி சிலர் தமது முகத்தை வெளியே காட்டிய வண்ணம் தொலைக்காட்சியில் தோன்றியிருந்தனர்.
இதில் ஒரு தொகுப்பாளர் இந்த அரசாணையை எதிர்ப்பதாகவும் ஆனால் தமது முதலாளிமார் அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் அண்மைய வாரங்களில் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டோலோ நியுஸ், அரியான தொலைக்காட்சி, ஷம்ஷாத் டீவி போன்ற பிரபலமான தொலைக்காட்சிகளில் பெண் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பவர்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளில் தோன்றும் பெண்கள் ஹிஜாப் மற்றும் முகத்தை மறைத்த வண்ணமே தோன்றினர்.
அடுத்த கட்டமாக தம்மை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து முழுமையாக வெளியேற்றும் அச்சம் இருப்பதாக பல பெண் தொகுப்பாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.