வெங்கல பதக்கம் வென்றது நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் ‘அவல நாயகன்’

0
267

அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியில்  மத்திய மாகாணத்தை பிரதிநிதித்து வபடுத்தி இலக்கிய நாடக போட்டியில் , போட்டியிட்ட நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்து வெங்கல பதக்கத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

இப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) பம்பலபிட்டிய இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் இலக்கிய நாடக போட்டியில் எட்டு மாகாணங்களில் இருந்து போட்டியாளர்கள் வருகை தந்திருந்ததுடன்

முதலாம் இடத்தை கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியும்,

இரண்டாம் இடத்தை மேல் மாகாணம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியும்

மூன்றாம் இடத்தை – மத்திய மாகாணம்- நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த மலையக சமூகத்தினருக்கும் பெருமையை தேடிதந்த “அவல நாயகன்” எனும் குறித்த இலக்கிய நாடகத்தில் பா.பிரவீன், கொலின், சிரஞ்சீவன், கலைச்செல்வன், மோகனசுந்தரம், ரோய், தனுஜன், பிரசாந்தன், மிசேல், செரோன், நவனீதா, ஹர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் இந்த நாடகத்தை கல்லூரியின் நாடக ஆசிரியர்  சுதர்சன் நெறியாள்கை செய்ததுடன் ஆசிரியர் சண்முகநாதன், மாணவன் நெவின் ஆகியோர் இசையமைத்திருந்ததுடன் மாணவன் கவிஷான் மேடை முகாமையாளராக பணியாற்றினார். மேலும் தனிநடன போட்டியில் பங்குபற்றிய செல்வி கீர்த்திகாவும் தன்னுடைய திறமையை வெளிபடுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார்.

மாணவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்து பக்க பலமாக இருந்த கல்லூரியின் முதல்வர்   எஸ்.ரவிச்சந்திரன், உப அதிபர்களான கி. திருச்செல்வன் மற்றும் திருமதி. பொன்மலர், பகுதி தலைவர்கள் தமிழ் மொழி தின போட்டி பொறுப்பாசிரியர் செல்வராணி அவர்களையும் பாடசாலை நிர்வாகத்தினரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டிகள் – 2022, கொழும்பு பம்பலபிட்டிய இந்து கல்லூரியில் நடைபெற்றது. அந்தவகையில் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி இலக்கிய நாடக போட்டியில் போட்டியிட்ட நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்து வெங்கல பதக்கத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

குறித்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (06) பம்பலபிட்டிய இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் இலக்கிய நாடக போட்டியில் எட்டு மாகாணங்களில் இருந்து போட்டியாளர்கள் வருகை தந்திருந்ததுடன்

முதலாம் இடத்தை கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியும்,

இரண்டாம் இடத்தை மேல் மாகாணம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியும்

மூன்றாம் இடத்தை – மத்திய மாகாணம்- நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த மலையக சமூகத்தினருக்கும் பெருமையை தேடிதந்த “அவல நாயகன்” எனும் குறித்த இலக்கிய நாடகத்தில் பா.பிரவீன், கொலின், சிரஞ்சீவன், கலைச்செல்வன், மோகனசுந்தரம், ரோய், தனுஜன், பிரசாந்தன், மிசேல், செரோன், நவனீதா, ஹர்ஷினி ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் இந்த நாடகத்தை கல்லூரியின் நாடக ஆசிரியர் திரு. சுதர்சன் அவர்கள் நெறியாள்கை செய்ததுடன் ஆசிரியர் சண்முகநாதன், மாணவன் நெவின் ஆகியோர் இசையமைத்திருந்ததுடன் மாணவன் கவிஷான் மேடை முகாமையாளராக பணியாற்றினார். மேலும் தனிநடன போட்டியில் பங்குபற்றிய செல்வி கீர்த்திகாவும் தன்னுடைய திறமையை வெளிபடுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார்.

மாணவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்து பக்க பலமாக இருந்த கல்லூரியின் முதல்வர் திரு. எஸ்.ரவிச்சந்திரன் உப அதிபர்களான கி. திருச்செல்வன் மற்றும் திருமதி. பொன்மலர், பகுதி தலைவர்கள் தமிழ் மொழி தின போட்டி பொறுப்பாசிரியர் செல்வராணி அவர்களையும் பாடசாலை நிர்வாகத்தினரையும் பாடசாலை மாணவர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

(ரா.கவிஷான் – நுவரெலியா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here