பல கனவுகளுடன் தனது குடும்ப சூழ்நிலையை மனதிற்கொண்டு பயணித்த மலையக யுவதியின் இறுதிப்பயணம் பஸ் விபத்தொன்றில் நிறைவுற்றதுடன் முழு மலையகத்தை மாத்திரம் அல்லாது கல்விச் சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளது.
யார் இவர்?
நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்தில் பல சவால்களுக்கு முகங்கொடுத்தவாறு இணைந்து கல்வியைத் தொடர்ந்தவர் சயாகிரி.
ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் கற்று நிறைவு செய்த ராமகிருஷ்ணன் சயாகிரி மேற்படிப்தைத் தொடர்வதற்காக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் சளைக்காது முயற்சி செய்து தனியார் கல்வியகம் ஒன்றில் பணம் செலுத்தியிரந்துள்ளார்.
இந்நிலையிலேயே அதற்கு முன்னதாக யாழ் பல்கலைக்கழகத்திற்கு இணைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த வாய்ப்பும் கைகூடியது.
வாயப்பைத் தவறவிடாமல் மருத்துவ பீடத்தில் இணைந்து கொண்டு மேல்படிப்பைத் தொடர்ந்துள்ளதுடன் சகல துறைகளிலும் அவர் ஆளுமைமிக்கவர் என்று அவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் தமது கருத்துக்ககை பகிர்ந்துள்ளனர்.
இவரது பெற்றோர் விஷேட தேவையுடையவர்களாக இருந்த போதும் அவர்கள் கோவிலுக்கு பூமாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு சயாகிரியுடன் மேலும் இரண்ட பிள்ளைகளையும் நன்றாகவே வளர்த்து அவர்களுக்கு தேவையான கல்வியையும் வழங்கியுள்ளனர்.
சயாகிரி குடும்பத்தில் மூத்தவள். பொறுப்புக்கள் நிறைந்தவள் என்பதை அவரது தொடர் விடாமுயற்சி தெளிவாக புலப்படுகின்றது. அவரது கல்வியை நிறைவு செய்து தொழில்நுட்பத்துறையில் பல்கலைக்கழக நுழைவுக்காக காத்திருக்கின்றார்.
அவரது சகோதரி க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை முடித்துவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருப்பதாகத் தெரியவருகிறது.
சயாகிரி சிறந்த பல்கலைக்கழக மாணவி என்பதுடன் அவரது குணாதிசயங்கள் அவரது ஆளுமைகள் குறித்து அவரது ஆகானொருவர் பகிர்ந்திருக்கும் கீழ்வரும் கவிதையே சான்று பகிரும்….
அனைவரது அன்பையும் ஆதரவையும் பெற்ற சயாகிரி ராமகிருஸ்ணன் தனது 23 வயதிலேயே எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளார்…. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்…