2022 -2023 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம்

0
276

2022 -2023 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்னமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக பெல்மதுளை ரஜமகாவிகாலை, இரத்தினபுரி பொத்குல் விகாரை விகராதிபதி பெங்கமுவ ஸ்ரீ தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி பருவகாலம் ஆரம்பிப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் முகமாக ஸ்ரீபாத நல்லத்தண்ணி கிராம சேவகர் காரியாலய மண்டபத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், விகராதிபதி பெங்கமுவ ஸ்ரீ தம்மதின்ன மேலும் தெரித்தபோது,
பெல்மதுளை- கல்கொத்தாவ இரஜ மகாவிகாரையில் பதிவு படுத்தப்பட்டுள்ள சம்ன்தேவ ஆலயப்பொருட்கள் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் என்பன எதிர்வரும் 12 டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி குறித்த விகாரையில் இருந்து வெளியில் எடுக்கப்படும்.

பின்னர் 6 ஆந் திகதி குறித்த பெட்டி வீதி உலாவாக கொண்டு வரப்பட்டு சிவனொளிபாத மலை உச்சியில் பிரதிஷ்டை செய்யப்படும். இரத்தினபுரி வீதி, இரத்தினபுரி அவிசாவளை வீதி , பெல்மதுளை – பலாங்கொடை – பொகவந்தலாவை வீதி வழியாக கொண்டு செல்லப்படும்.

அவிசாவளை நோட்டன் பிரீட்ஜ் வீதி திருத்தப்டாதுள்ளதால் அதனை திருத்தி தருமாறு உரிய அதிகாரிகளை விகராதிபதி கேட்டக்கொண்டார்.
பருவகாலத்தின் போது குறித்த பகுதிகளில் வியாபார நடவடிக்கைகள் ஏதேனும் ஈடுபட விரும்பினால் முன்கூட்டி அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது , நோர்வூட் , மஸ்கெலியா,அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர்கள் அம்பகமுவ பிரதேச செயலாளர்  மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எம்.கிருஸ்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here