பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் உத்தேச அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பில் உரையாற்றவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.
அத்துடன் பிரதமர் நிதியமைச்சர் என்ற ரீதியில் நிதி ஒதுக்கீட்டுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணையை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.