மண்ணெண்ணை வழங்கக்கோரி அட்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்

0
406
மண்ணெண்ணை வழங்கக்கோரி  அட்டன் நகர பிரதான வீதியை மறித்து இடம்பெற்று வரும் வீதி மறியல் போராட்டத்தினால் பல மணி நேரம் வீதிப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அட்டன் நகர மாணிக்கப்பிள்ளையார் ஆலத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு முன்பாகவே சுமார் 400 பேர் வரை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
07/06/2022 காலை 07 மணிமுதல் குறித்த எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பயனாளிகளிடம் 8.30 மணியளவில் எரிபொருள் நிறப்பு நிலைய ஊழியர்கள் இன்றும் நாளையும் மண்ணெண்ணை விநியோகம் இடம்பெறாது எனவும் இரண்டு நாட்களின் பின்னரே மண்ணெண்ணை வரும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து நீண்ட வரிசையில் நின்ற பயனாளிகள் அட்டன் நகரின் பிரதான வீதித்தை மறித்து போராட்டத்தில் ஈடுடபட்டனர் இதனால் மூன்று மணித்தியாலங்கள் தொடர்ந்து வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் அட்டன் கொழும்பு, அட்டன் கண்டிக்கான பொதுப்போக்குவரத்து சேவை ஒஸ்போன் நோட்டன், தியகல ஊடாக இடம்பெற்று வருவதுடன் அட்டன் தலவாக்கலை, நுவரெலியா பொதுப் போக்குவரத்து மல்லியப்பு சந்தியிலிருந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here