தொ.தே.ச – இ.தொ.க கூட்டு நடவடிக்கையால் மஸ்கெலியா கிலனோஜி தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு –

0
332

கிலனொஜி (டீசைட்) தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கையை தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 21 நாட்களாக மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிலனோஜி தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்தான அட்டன், தொழிலாளர் தொழில் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற பேச்வார்த்தையின் போதே உரிய தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது.

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட கிலனோஜி தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந் நிலையில் , தோட்ட நிர்வாகத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் அது பலனளிக்காத நிலையில் நேற்றைய தினம் அட்டன், தொழிலாளர் தொழில் நீதிமன்றில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க உயர்பீட உறுப்பினர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க உயர்பீட உறுப்பினர்கள், மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி பொது முகாமையாளர், கிலனோஜி தோட்ட முகாமையாளர், மற்றும் அனைத்து தொழிற்சங்க தோட்ட தலைவர்கள் முன்னிலையில் பேச்சுவாரத்தை இடம்பெற்றது.

முன்வைக்கப்பட்ட 14 அம்ச கோரிக்கைகள் தோட்ட நிர்வாகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுவதாக உறுதியளித்துள்ளனர்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here