எழுத்தாளர் கல்வியாளர் லெனின் மதிவானம் காலமானார்

0
3840

எழுத்தாளர், கல்வியாளர்,லெனின் மதிவாணம் இன்று. காலமானார்.   காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆசிரியராக தொழில் தொடங்கிய அவர் வெளிவாரியாகவே இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றதோடு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் விளங்கினார்.

இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையிலும் வெற்றிபெற்றவர், இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகவும் உயர்ந்தார். ஹட்டன், காசல்ரீ தோட்டத்தில் பிறந்துவளர்ந்த இவரது தொழில் ஆளுமைக்கு வெளியே இலக்கிய உலகில் விமர்சகராக செயற்பாட்டாளராக தன்னை பரவலாக அடையாளப்படுத்தியவர். 

நன்மதிப்பைப் பெற்றவர். ‘மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள் – சில அவதானிப்புகள்’ ‘பேரா.க.கைலாசபதி: சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’ ‘மலையகம் தேசியம் சர்வதேசம்’ ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ ஆகிய நூல்களைத் தந்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக திடீர் நோய்த்தாக்கத்துக்கு உள்ளான லெனின் மதிவானம் இன்று காலமானார்.

ஜீவா சதாசிவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here