74 ஆவது அகவையில் கர்தினால் மெல்கம்

0
165

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தனது 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இலங்கையின் முதல் கர்தினாலாகவிருந்த தோமஸ் கூரேயின் மறைவுக்கு பின்னர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது கர்தினாலாக தெரிவு செய்யப்பட்டவர் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்.

இவர் குருநாகல் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டொன் வில்லியம், மேரி வினிஃப்ரீடா தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பொரளை புனித அலோசியஸ் குருமடம் புகுந்தார்.

1966-_1970 ஆம் ஆண்டுகளில் கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். இதனையடுத்து மேற்படிப்புக்காக ரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். ரோமிலிருந்து ரோம் திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

உரோமில் படிப்பை முடித்த பின்னர் இலங்கை திரும்பிய மல்கம் ரஞ்சித் கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் பங்குகளில் மறைபணி ஆற்றினார்.

1983 இல் மறைபரப்பு நிறுவனங்களின் தேசிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக 1995 நவம்பர் 2ஆம் திகதி மல்கம் ரஞ்சித் பொறுப்பேற்றார். 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பேரருட்திரு.

மல்கம் ரஞ்சித்தை கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here