12 இலங்கை பெண்கள் ஓமானில் மாயம்

0
241

பணிப் பெண்களாக ஓமானுக்குச் சென்றுள்ள 12 இலங்கை பெண்கள் மாயமாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் டொலரை கொண்டுவர பெரும்பாடுபடுகின்ற பெண்களை, பணத்துக்காக விற்கும் சிலர் தொடர்பாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபிக்கு அழைத்துச்செல்லப்பட்ட பெண்களை, அவர்களின் விருப்பமின்றி ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இலங்கை பெண்கள் 12 பேரும் அந்த குழுவில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று ஓமானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்களது தொலைபேசிகள் இயங்கவில்லை எனவும் தெரிய வருகிறது.

இந்த பெண்கள் சுற்றுலா விசா மூலம் அபுதாபிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவர்களது கடவுச்சீட்டுகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளன.

பின்னர், வேலைவாய்ப்பு முகவர் நிறுவன தரகர்களால் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here