பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

0
282

அரசியலமைப்பு ரீதியாக கூடிய விரைவில் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்டம் தெரிவித்துள்ளது. மக்கள் தமது தேவைகளை பிரதிபலிக்கக்கூடிய புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்ய முடியும் என மறைமாவட்டம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் இளம் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகக் குழுக்கள், மதத் தலைவர்கள் மற்றும் ஏனையோரைச் சட்டத் தரணிகள் சங்கம் பாராட்டுவதுடன், எதிர்காலத்தில் அவர்களின் முக்கியமான பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என கொழும்பு ஆயர் துஷாந்த ரொட் ரிக்கோ விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here