சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 1100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்காமை, பக்கச்சார்பான தீர்வுகள், அதிகார துஷ்பிரயோகம், தாக்குதல்கள், சித்திரவதைகள், பெண்களை துன்புறுத்துதல், போதைப்பொருள் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் போன்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் புதிதாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதுள்ள ஆணைக்குழு இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.