பெரிய வெங்காய விலைக்கு நிவாரணம்

0
171
விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விகிதத்தை குறைப்பதற்கு உணவு கொள்கைகள் குழு கடந்த 24ஆம் தேதி கூடிய போது பரிந்துரை செய்தது. 
அதற்கமைய, சந்தையில் பெரிய வெங்காயத்தை  விலைக்கு வாங்குவதை அதிகரிப்பதற்கும் அதன் விலையை குறைப்பதற்கும் ஏதுவாக அமைந்தது.
வெங்காயத்துக்கான மொத்த தேவை ஆண்டுக்கு சுமார் 300,000 மெட்ரிக்  டொன்னாகும். அத்தேவையானது முக்கியமாக (86%) இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுகின்றது. அதன்படி வெங்காயத்தின் தன்னிறைவு விகிதம் ஒரு ஆண்டுக்கான தேவையில் 14% வீதமாகும். 

நவம்பர் மாத மூன்றாவது வாரம் அளவில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 290- 390 ரூபாவாகும். அதே வேலை உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ கிராம் 340 தொடக்கம் 400 ரூபாவாக காணப்பட்டது. 
நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் சராசரி விலை (CIF விகிதம்) 95.30 ரூபாவாக காணப்பட்டதோடு 2022 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் அதன் விலைக்கு இணைந்ததாக சாதாரண அதிகரிப்பை மாத்திரமே காட்டியது. 

2022 வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி  முதல் அரசாங்கம் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கு குறிப்பிட்ட விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரியை 10ரூபா  தொடக்கம் 50 ரூபா வரை அதிகரித்தது. அதனை தொடர்ந்து பெரிய வெங்காய இறக்குமதி பெருமளவு குறைந்தது.  
ஆகஸ்ட் மாதத்தில் 27,889 மெட்ரிக் டொன்னாக காணப்பட்ட இறக்குமதி, நவம்பர் மாதம் ( மூன்றாவது வாரமளவில்) 13,496 மெட்ரிக் டொன்னாக வீழ்ச்சி அடைந்தது. இந்த வீழ்ச்சியினால்  ஆகஸ்ட் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 175 ரூபாவிலிருந்து 328 ரூபாய் வரை அதிகரிக்க காரணமாக அமைந்தது.
எவ்வாறாயினும் நவம்பர் 22 ஆம் திகதியிலிருந்து ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாய் வரை வீழ்ச்சியை காட்டியுள்ள போதும், விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விகிதம் அதிகரிப்பதற்கான காலப்பகுதிக்கு இணைந்ததாக அதன் விலையிலும் அதிகரிப்பைக் காணமுடிகின்றது. 

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் CIF விகிதம் மிகக் குறைந்தளவே அதிகரித்துள்ளபோதும் இத்திடீர் விலையேற்றத்துக்கு காரணம் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட வர்த்தக பொருள்களுக்கான வரி விகித அதிகரிப்பேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD)
27.11.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here