ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரி மற்றும் விளையாட்டுப் பிரிவினால் நடாத்தப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 27ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவை மைதானத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எடிட்டோரியல் செலஞ்சர்ஸ், எட்வான்ஸ் பவர், ஃபயர் போல்ஸ், டிஜிட்டல் நோமேட்ஸ், மொன்ஸ்டர்ஸ், கோல்டன் ஃப்ளாஷஸ், பெட்டிங் டீவாஸ் (பெண்கள்) மற்றும் பொம் ஸ்கொட் (பெண்கள்) ஆகிய 8 அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன.
போட்டியில் கோல்டன் ஃப்ளாஷஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய போக்குவரத்து பிரிவு வெற்றி பெற்றது. ஃபயர் போல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய புகைப்படப் பிரிவின் வீரர்கள் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
தனுஷ்க வன்னியாராச்சி தலைமையிலான கோல்டன் ஃப்ளாஷஸ் அணியில் ஜனித் மலிந்த பெரேரா, தனுஜ் மதுசங்க, சமந்த பிரதீப் குமார், வினோத் ஹரித, நந்தன குமார, பிரியதர்ஷன எல்விட்டிகல, எம்.பி.சுனில், மேகலா அவந்தி ஜயதுங்க, நெதுனி பண்டார ஆகியோர் விளையாடினர்.
போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருது கோல்டன் பிளாஷஸ் அணியின் தலைவர் தனுஷ்க வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டது. எட்வான்ஸ் பவர் அணியின் தலைவர் தனுஷ்க ராமநாயக்க சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதையும், ஃபயர் போல்ஸ் அணியைச் சேர்ந்த சுமிந்த கீர்த்தி சிறந்த பந்து வீச்சாளராகவும், பெட்டிங் டீவாஸ் அணியின் தலைவி நேரஞ்சா நவரத்ன சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் (சர்வதேச ஊடகம்) ஷெனுகா செனெவிரத்ன, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுதீர நிலங்க விதான மற்றும் ஊடகப் பணிப்பாளர் டபிள்யு.எம்.கே விஜயபண்டார ஆகியோர் வழங்கி வைத்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு