இறுதிச் சடங்கின்போது மண்சுவர் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமரூனில் 20 மீற்றர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற இறுதிச்சடங்கின்போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
கமரூன் தலைநகர் யவுண்டே கனமழை காரணமாக இந்த ஆண்டு பல பேரழிவை சந்தித்தது. வெள்ளத்தால் அந்த பகு தியின் உட்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள 20 மீற்றர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு ஒன்று நடைபெற்றது.
இதன்போது, நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்த தாக அப்பகுதி ஆளுநர் தெரிவித்துள் ளார்.
மீட்பு படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் சட லங்கள் மீட்கப்பட்டு மத்திய மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுவதாக வும், மண்ணில் புதையுண்ட மற்றவர் களை மீட்கும் பணி நடைபெற்று வருவ தாகவும் அவர் கூறியுள்ளார்.