10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாவை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும் டொலரைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் இலங்கையில் சட்ட பூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக பயன்படுத்த இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு தேவையான பணப் புழக்க ஆதரவை இது வழங்கும் எனவும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும். அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.