பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தில் 18ஆம் இலக்க தேயிலை மலையில் நான்கு கால்களும் வெட்டப்பட்டு, வேட்டைப்பல்லும் கழற்றப்பட்ட நிலையில் 06 அடி நீளம் கொண்ட பெண் புலியின் சடலமே இன்று மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேயிலை மலைப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவரினால் உயிரிழந்த நிலையில் புலி அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்த பொகவந்தலாவை பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்து புலியினை மீட்டுள்ளனர். புலியின் உடல் அழுகிய நிலையிலும்இ நான்கு கால்கள்
வெட்டப்பட்டுஇ வேட்டைப்பல் கழற்றப்பட்ட நிலையிலும் காணப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த புலியை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக பொலிஸார் சந்தேகித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு பொகவந்தலாவை பொலிஸாரின் ஊடாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு வருகை தந்த நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உயிரிழந்த புலி தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு இப் புலி உயிரிழந்த பின்னரே அதன் கால்கள் வெட்டப்பட்டுஇ பற்கள் கழற்றப்பட்டுள்ளதாக
தெரிவித்தனர். மீட்கப்பட்ட புலியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹட்டன்
நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியோடு ரந்தனிகலை மிருக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிசார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.