வலப்பனை பிரதேச சபைக்கு உரிய நில்தண்டாஹின நகரில் பிரதேச மக்கள் (01) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
நகரில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நில்தண்டாஹின்ன பிரதேசம் வறுமைக்குறிய பிரதேசம் இங்கு ஏற்கனவே ஒரு மதுபான விற்பணை நிலையம் உள்ள நிலையில் மேலும் ஒரு மதுபான விற்பனை நிலையம் எமக்கு தேவையில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது.இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்ல கஷ்டப்படுகிறோம்.
இவ்வாறான நிலையில் எமக்குறிய நகரில் மேலதிகமாக மது விற்பனை நிலையத்தை திறந்து மதுவுக்கு எமது சமூகத்தை ஈடுப்பட வைப்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம் என கிராம பெண்கள் தெரிவிக்கின்றனர்.
எமது பிரதேச அபிவிருத்திகள் பல பின்தங்கிய நிலையில் உள்ளது,பாடசாலை மாணவர்கள் முதல் இளைஞர்கள்,பெரியவர்கள் என பலரும் போதை பொருளுக்கு அடிமையாகி வருகினறனர்.
குடும்ப வருமானத்திற்கு தினமும் உழைக்கும் எமது வீட்டு ஆண்கள் அப்பணத்தை மது பாவணைக்கும்,போதை பொருள் பாவணைக்கும் செலவு செய்ய அனுமதிக்காது கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலையில் இவ்வாறு மது விற்பனை நிலையங்களை
புதிதாக திறந்து சமூகத்தை பாதாளத்தில் தள்ளிவிட நினைப்பது சரியில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கருத்திட்டனர்.
மேலும் நாட்டின் ஜனாதிபதி வலப்பனை பிரதேச மக்களின் வாழ்க்கை நிலையை வந்து பார்க்க வேண்டுகிறோம்.
எனவே நகரில் இருக்கும் மது விற்பணை நிலையம் ஒன்று போதும் புதிதாக திறக்கப்படவுள்ள மதுவிலக்கை நிலையத்தின் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தினமும் வீதிக்கு இறங்கி போராடுவோம் என பிரதேச மக்கள் எச்சரிக்கை விடுத்து கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நில்தண்டாஹின்ன நகரில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையினால் நகரின் இயல்பு நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஆ.ரமேஸ்.